Oct 30, 2025
Thisaigal NewsYouTube
ஸ்டீவன் லிம்- பினாங்கு DAP தலைவரா?
அரசியல்

ஸ்டீவன் லிம்- பினாங்கு DAP தலைவரா?

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 13-

பினாங்கு மாநில டிஏபி-யின் தேர்தலுடன் கூடிய மாநாடு வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி நடைபெறவிருகிறது. தேர்தல் களத்தில் 32 பேர் போட்டியிடும் நிலையில் மனித வள அமைச்சரும், புக்கிட் மெர்தாஜாம் - நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்டீவன் லிம் - மை பினாங்கு மாநில டிஏபி தலைவராக கொண்டு வருவதற்கு கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கோடி காட்டியிருப்பதாக சீனப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பினாங்கு மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் பதவிக்கு வித்திடக்கூடியது மாநில டிஏபி தலைவர் பதவியாகும். இந்நிலையில் மாநிலத்தின் 15 பொறுப்பாளகளை தேர்வு செய்யும் இத்தேர்தலில் மாநில டிஏபி தலைவர் பதவிக்கு ஸ்டீவன் லிம் குறி வைத்துள்ள வேளையில் டிஏபி-யின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் மகளும், முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங்கின் சகோதரியுமான Lim Hui Ying- கும் குறி வைத்துள்ளார்.

இந்நிலையில் ஸ்டீவன் லிம்- மிற்கு அந்தோணி லோக் மறைமுக ஆதரவை தெரிவித்து வருவதாக அந்த சீனப்பத்திரிகை மேற்கோள்காட்டியுள்ளது.

Related News

ஸ்டீவன் லிம்- பினாங்கு DAP தலைவரா? | Thisaigal News