கோத்தா கினபாலு, செப்டம்பர்.06-
எதிர்வரும் மாநிலத் தேர்தலில் தங்களுடன் கூட்டணி அமைப்பதற்கான கபுங்கான் ரக்யாட் சபாவின் முன்மொழிவை சபா அம்னோ நிராகரித்துள்ளது.
தங்கள் கட்சி எந்த ஒரு ஏமாற்று வேலைக்கும், அதிகார வெறி கொண்ட அரசியலுக்கும் அடிபணியாது என்றும் சபா அம்னோ தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின் கூறுகையில், மாநில அமைச்சரவை பதவியேற்ற நாளில் அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் தன்னை ஏமாற்றி விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் பதவிகள் நியமனம் குறித்து ஹஜிஜி நோர் பொய் சொல்லி விட்டதாகவும் புங் மொக்தார் தெரிவித்துள்ளார்.