Aug 26, 2026
Thisaigal NewsYouTube
அந்தப் பிரச்சாரத்தை உடனடியாக நிறுத்திக்கொள்வீர்
அரசியல்

அந்தப் பிரச்சாரத்தை உடனடியாக நிறுத்திக்கொள்வீர்

Share:

ஒற்றுமை அரசாங்கத்தில் இணைவது தொடர்பில் கூட்டரசு அரசாங்கத்துடன் பாஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படும் வசந்தியை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு டிஏபி தலைவர் லிம் குவான் எங் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக டிஏபி அமைச்சர்களை தாமே நேரடியாக சந்தித்து விளக்கம் கேட்டதாகவும், அவர்களும் இதனை மறுத்துள்ளனர் என்றும் லிம் குவான் எங் குறிப்பிட்டார்.

உயர்மட்ட அளவில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. அப்படி நடைபெறுவதாக கூறப்படுவது வெறும் வதந்தியே என்று லிம் குவான் எங் தெளிவுபடுத்தினார்.

இன்று நாடாளுமன்றக்கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அரசாங்க எம்.பி.க்களுக்கு விளக்கம் அளிக்கும் நிக்ழ்வு, புத்ராஜெயா, ஸ்ரீ பெர்டானாவில் நடைபெற்றது. இந்த விளக்கமளிப்பு கூட்டத்திற்கு தலைமையேற்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் இவ்விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை என்று லிம் குவான் எங் குறிப்பிட்டார்.

Related News