கோலாலம்பூர், டிச.7-
2025 ஆம் ஆண்டில் ஆசியான் தலைவர் பதவியை வகிக்கும் காலக்கட்டத்தில் மலேசியா,ஆசியான் அமைப்பு மற்றும் இதர பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பதில் தீவிர கவனம் செலுத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
தனக்கு வழங்கப்பட்ட தவணைக் காலத்தின் போது ஆசியான் பொருளாதார ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும் என்பதுடன் நீடித்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை உறுதி செய்யும் நடவடிக்கைகளுக்கும் அது முன்னுரிமை அளிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
உலக வர்த்தக அமைப்பான டபிள்யூ.டி.ஓ.வின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ங்கோஸி ஓகோன்ஜோ இவேல்லாவை நேற்று கோலாலம்பூரில் சந்தித்தப் பின்னர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவொன்றில் நிதியமைச்சருமான அன்வார் இவ்வாறு கூறினார்.








