Feb 21, 2026
Thisaigal NewsYouTube
ஜசெக சிறப்பு மாநாடு அக்கட்சியின் உட்புற விவகாரம்: ஃபாமி ஃபாட்சில் விளக்கம்
அரசியல்

ஜசெக சிறப்பு மாநாடு அக்கட்சியின் உட்புற விவகாரம்: ஃபாமி ஃபாட்சில் விளக்கம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.21-

வரும் ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜசெக சிறப்பு மாநாடு என்பது, அக்கட்சியின் முடிவுகள் நிலைநாட்டப்படுவதை உறுதிச் செய்வதற்கான ஓர் உட்புறச் செயல்முறை என்று அரசாங்கத் தொடர்பாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

தொடர்புத் துறை அமைச்சருமான டத்தோ ஃபாமி, இந்த மாநாடு குறித்து ஜசெக ஏற்கனவே கூட்டணியில் உள்ள மற்ற பங்காளிகளிடம் தெரிவித்து விட்டதாகவும் கூறினார்.

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற கலை மற்றும் கலாச்சார ஒற்றுமை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜசெக.வில் எடுக்கப்படும் முடிவுகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதிச் செய்யவே இம்மாநாடு நடத்தப்படுகிறது. இது அவர்களின் முடிவெடுக்கும் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒரு செயல்முறை," என்றார்.

முன்னதாக, ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கூறுகையில், இம்மாநாட்டின் மூலம் கட்சிப் பதவிகளில் இருப்பவர்கள் அரசாங்கப் பதவிகளைத் துறக்க வேண்டுமா என்பது குறித்து பிரதிநிதிகள் முடிவெடுப்பார்கள் என்றும், அதே வேளையில் ஜசெக.வின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஆட்சிக்குத் தவணை காலம் முடியும் வரை தொடர்ந்து ஆதரவு அளிப்பார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

Related News