Aug 26, 2026
Thisaigal NewsYouTube
ஜொகூர் இடைக்கால சுல்தானின் கூற்று, அரசியலைமைப்புக்கு எதிரானது
அரசியல்

ஜொகூர் இடைக்கால சுல்தானின் கூற்று, அரசியலைமைப்புக்கு எதிரானது

Share:

மலேசியாவில் ஜொகூர் ஒரு பகுதி அல்ல; மாறாக, பங்காளித்துவ நண்பராக அம்மாநிலத்தைக் கருத வேண்டுமென அதன் இடைக்கால சுல்தான், துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் கூறியுள்ளது சரியான கூற்று அல்ல; அது அரசியலைமைப்பு எதிரானது என சட்ட நிபுணர் தெரிவித்தார்.

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சட்ட பேராசிரியர் முகமது ஹஸ்மி முகமது ருச்லி கூறுகையில், ஒரு தலைவர் பேசும்போது, அவர் பயன்படுத்துகின்ற வார்த்தைகளில் அதிக கவனம் கொள்ள வேண்டும் என்றார்.

கூட்டரசு அரசியலைமைப்பின் கீழ் மலேசியா உருவாக்கப்பட்டுள்ளது. அதன் படி, எந்தவொரு மாநிலத்தையும் பங்காளித்துவ நண்பராக கருத வேண்டுமென கூறும் சட்டக்கூறுகள் அதில் குறிப்பிடப்படவில்லை.

அனைத்து மாநிலங்களும் மலேசியாவில் ஓர் அங்கமே. மலேசியா எவ்வாறு தோற்றுவிக்கப்பட்டது என்பதை, அனைத்து தரப்பினரும் அரசியலைப்பை படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும் என ஹஸ்மி கூறினார்.

Related News