Apr 19, 2026
Thisaigal NewsYouTube
இரு தரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மலேசியா வருகை
அரசியல்

இரு தரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மலேசியா வருகை

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.20-

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் இன்று வெள்ளிக்கிழமை, மலேசியாவுக்கு சிறப்பு வருகை புரியும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்திக்கிறார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்ற தலைவர்கள் ஓய்வுத் தள சந்திப்பின் முடிவுகள் உட்பட, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து, இரு பிரதமர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரானது மலேசியாவின் அண்டை நாடாகவும், ஆசியானில் முக்கிய பங்காளியாகவும் உள்ளது என்பதோடு, பல்வேறு துறைகளில் நெருக்கமான மற்றும் விரிவான உறவுகளைக் கொண்டுள்ளது.

மேலும், சிங்கப்பூரானது மலேசியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாகவும் உள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தின் மதிப்பானது 402.35 பில்லியன் ரிங்கிட்டை எட்டியது.

இது கடந்த 2024-ஆம் ஆண்டுடன் உடன் ஒப்பிடும்போது 1.5 விழுக்காடு அதிகமாகும்.

Related News