பாஸ் கட்சியுடன் ஒத்துழைப்பது பற்றி இனி யோசிக்கத் தேவையில்லை, காரணம் அது நீடித்து பலனளிக்காது ந்ன் அம்னோ உச்சமன்ற உறுப்பினரான புவாட் சர்காஷி தெரிவித்தார்.
கடந்த 2018 பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட முவஃபாக்காட் நெஷ்னல் இல் இணையவது தவறிப்போனது. அதற்கு பாஸ் கட்சியின் துரோகமே காரணம் என்றார் அவர்.
ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோ நிலைத்திருக்கும். மக்களின் பொருளாதார மேம்பாட்டை உயர்த்த அக்கட்சி உழைக்கும் எனக் கூறிய புவாட், எதிர்க்கட்சியாக இருந்து அரசாங்கத்தின் இந்த முன்னெடுப்புக்கு உறுதிணையாக இருந்து தமது பங்களிப்பை தேசியக் கூட்டணி வழங்கலாம் என்றார்.








