15 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் பினாங்கு சட்டமன்றம் நாளை புதன்கிழமை கலைக்கப்படவிருக்கிறது. பினாங்கு சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான பிரகடனத்தில், மாநில ஆளுநர் துன் அஹ்மாட் ஃபுஸி அப்துல் ரஸாக் இன்று கையெழுத்திட்டார்.
மாநில சட்டமன்றத்தைக் கலைப்பது தொடர்பாக, இன்று காலை 8 மணியளவில், செரி முத்தியாராவில், பினாங்கு மாநில முதலமைச்சர் சொவ் கொன் யாவ், மாநில ஆளுநர் துன் அஹ்மாட் ஃபுஸியை சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, பினாங்கு சட்டமன்றத்தைக் கலைப்பது தொர்பான பரிந்துரையை முன்வைத்ததுடன், சட்டமன்றத்தை நாளை புதன்கிழமை கலைப்பது தொடர்பான பிரகடனத்தில் ஆளுநர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளதாக மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான சொவ் கொன் யாவ் தெரிவித்தார்.