கோத்தா கினபாலு, நவம்பர்.14-
சபா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை சனிக்கிழமை நடைபெறும் வேளையில் ஒற்றுமை அரசாங்கத்தில் உறுப்புக் கட்சிகளாக இருக்கும் பிகே ஆர்மற்றும் ஜிஆர்எஸ் எனப்படும் Gabungan Rakyat Sabah, இரண்டு தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.
Bandau மற்றும் Moyog ஆகிய இரண்டு தொகுதிகளில் PKR-ரும், GRS- சும் எதிரும் புதிருமாக போட்டியிடுகின்றன. இதனை சபா PKR தேர்தல் இயக்குநர் Peto Galim உறுதிப்படுத்தினார்.
இவ்விரு தொகுதிகளிலும் இரு கட்சிகளும் பலம் பொருந்திய வேட்பாளர்களை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








