நாளை நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இனவாதத்தையும், மதவாதத்தையும் முதலீடாக கொண்டுள்ள பச்சை அலையை வாக்காளர்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்று நெகிரி செம்பிலான மம்பாவ் தொகுதியை தற்காத்துக்கொள்ள டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் யாப் யியு வேங் கேட்டுக்கொண்டார். நெகிரி செம்பிலான் மாநிலத்தைப் பொறுத்தவரை கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்லில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெற செய்து, மாநில ஆட்சி நிறுவப்படுவதற்கு தங்களின் வற்றாத ஆதரவை நல்கிய மக்களுக்கு யாப் யியு வேங் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
அதேவேளையில் மக்களின் வளப்பத்திற்கும் ஒரு நிலையான அரசாங்கத்திற்கும் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணியை ஆதரித்து மீண்டும் ஆட்சியில் அமர்த்துமாறு வாக்காளர்களை யாப் யியு வேங் கேட்டுக்கொண்டார். தாமான் ராசா ஜெயா வில் மம்பாவ் டிஏபி சேவை மையத்தின் முன்புறம் பக்காத்தான் ஹராப்பான் ஆதரவாளர்கள், தாமான் திவ் ஜெயா அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் பொறுப்பாளர்கள் என சுமார் 150 பேர் முன்னிலையில் உரையாற்றுகையில் யாப் யியு வேங் இதனை வலியுறுத்தினார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் கடந்த 10 மாத கால ஆட்சியில் அதன் கொள்கையை மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். ஒரு தூய்மையான, நம்பிக்கையான, ஆற்றல் வாய்ந்த அரசு, மீண்டும் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நிறுவப்படுதற்கு மாநில மக்கள் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணிக்கு தங்கள் வற்றாத ஆதரவை நல்க வேண்டும் என்று யாப் யியு வேங் கேட்டுக்கொண்டார்.

Related News

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா


