Oct 17, 2026
Thisaigal NewsYouTube

மலேசியாவில் PR அந்தஸ்து கொண்ட 30 ஆயிரம் பேரின் குடியுரிமை நலன் பாதுகாக்கப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியாவில் PR அந்தஸ்து கொண்ட 30 ஆயிரம் பேரின் குடியுரிமை நலன் பாதுகாக்கப்படும்

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 16-

நிரந்தர வசிப்பிடவாசிகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள PR அந்தஸ்தைக்கொண்ட சுமார் 30 ஆயிரம் பேரின் குடியுரிமை நலன் பாதுகாக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபிடின் நசுஷன் இஸ்மாயில் உத்தரவாதம் அளித்துள்ளார்.

தங்கள் நலன் புறக்கணிக்கப்படும் என்று அந்த 30 ஆயிரம் பேரும் அஞ்ச வேண்டியதில்லை என்று அமைச்சர் உறுதி அளித்தார்.

PR அந்தஸ்தைக்கொண்ட அரசாங்க சார்பற்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், கல்விமான்கள், சட்ட நிபுணர்கள் அனைத்துலக அமைப்பைச் சேர்ந்தவர்கள், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் குடியுரிமை தொடர்பான சட்டத்திருத்த மசோதா குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.

கூட்டரசு அமைப்புச்சட்டம் வழங்கிய அதிகாரத்திற்கு ஏற்ப அந்த 30 ஆயிரம் பேரின் நலனும் காக்கப்படும் என்று சைபுடின் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →