கோலாலம்பூர், டிசம்பர்.15-
பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடித் தொடர்பைக் கொண்டிருக்கவில்லை என்று அதன் தலைவர் டத்தோம்ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் அரசியல் கூட்டணி என்ற முறையில் பாரிசான் நேஷனலுக்கும், பக்காத்தான் ஹராப்பானுக்கும் இடையில் உள்ள நடப்பு ஒத்துழைப்பு மட்டுமே இரு கூட்டணிகளும் கொண்டுள்ள உறவுகளாகும் என்று பாரிசான் நேஷனல் தலைவருமான அஹ்மாட் ஸாஹிட் விளக்கினார்.
நாங்கள் அம்னோவைச் சேர்ந்தவர்கள். ஜசெக.வுடன் நேரடி தொடர்பைக் கொண்டிருக்கவில்லை. இதில் மசீச. என்பது பாரிசான் நேஷனலின் ஓர் உறுப்புக் கட்சியாகும். ஜசெக. என்பது பக்காத்தான் ஹராப்பானின் ஓர் உறுப்புக் கட்சியாகும் என்று ஸாஹிட் குறிப்பிட்டார்.
வருகின்ற பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுடன் கூட்டு ஒத்துழைப்பு கொண்டு இருக்க வேண்டாம் என்று மசீச. தலைவர் வீ கா சியோங், நடந்து முடிந்து கட்சி மாநாட்டில் பாரிசான் நேஷனலுக்கு எச்சரிக்கை விடுத்து இருப்பது தொடர்பில் கருத்துரைகையில் அஹ்மாட் ஸாஹிட் மேற்கண்டவாறு கூறினார்.








