May 4, 2026
Thisaigal NewsYouTube
இரண்டாம் கட்ட எஸ்டிஆர் உதவித் தொகையானது நாளை முதல் செலுத்தப்படும் / 5.2 மில்லியன் மலேசியர்கள் பயனடைகின்றனர் / பிரதமர் அன்வார் அறிவிப்பு
அரசியல்

இரண்டாம் கட்ட எஸ்டிஆர் உதவித் தொகையானது நாளை முதல் செலுத்தப்படும் / 5.2 மில்லியன் மலேசியர்கள் பயனடைகின்றனர் / பிரதமர் அன்வார் அறிவிப்பு

Share:

சும்பங்கான் துனை ரஹ்மா எனப்படும் எஸ்டிஆர் உதவித் தொகையின் இரண்டாம் கட்டமானது, நாளை மார்ச் 10-ஆம் தேதி முதல் செலுத்தப்படவுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று அறிவித்துள்ளார்.

அதன் படி, நாடெங்கிலும், சுமார் 5.2 மில்லியன் மலேசியர்கள் இந்த உதவித் தொகையைப் பெறவுள்ளனர்.

இந்த முன்கூட்டிய உதவித் தொகையானது, ரமலான் பண்டிகையைக் கொண்டாடத் தயாராகி வரும் மில்லியன் கணக்கான மலேசியர்களுக்கு உதவும் என்று அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

முதல் கட்டத்தை ஒப்பிடும் போது, இரண்டாம் கட்டத்தில் உதவி பெறுவோரின் எண்ணிக்கையானது 5.2 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம், முதல் கட்டத்தில் வழங்கப்பட்ட உதவித் தொகைக்காக, அரசாங்கம் 1.1 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கியிருந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்டத்திற்காக 1.3 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தின் கீழ், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 2 லட்சம் மலேசியர்களும், வரும் மார்ச் 30-ஆம் தேதி முதல் எஸ்டிஆர் உதவித் தொகையைப் பெறவுள்ளதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டாம் கட்ட உதவித் தொகையின் படி, 3.8 மில்லியன் குடும்பங்கள், 1.4 மில்லியன் தனித்து வாழும் மூத்த குடிமக்கள், சுமார் 100 ரிங்கிட் முதல் 600 ரிங்கிட் வரையில், அவரவர் தகுதிக்கு ஏற்ப பெறவுள்ளனர்.

2026 ஆம் ஆண்டிற்கான, STR மற்றும் SARA உதவித் தொகைக்கான அரசாங்கத்தின் மொத்த ஒதுக்கீடு 15 பில்லியனாக ரிங்கிட் ஆகும்.

இது மலேசிய வரலாற்றில், கூட்டரசு அரசாங்கத்தில் ஒதுக்கப்பட்ட அதிகப்பட்ச தொகையாகக் கருதப்படுகின்றது.

Related News

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு