Oct 21, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

DAP-யில் உட்பூசல் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.17-

டிஏபியில் உட்பூசல், உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. பினாங்கு டிஏபி தலைவரும், மனித வள அமைச்சருமான ஸ்மைடீவன் சிம்மை நோக்கி, கட்சியின் தேசியத் தலைவர் லிம் குவான் எங்கின் ஆதரவாளரும், உதவியாளருமான ஒருவர் துரோகி என்று Hokkien மொழியில் பகிரங்கமாக வசைப்பாடியதைத் தொடர்ந்து , அக்கட்சியின் உட்பூசல், நீறு பூத்த நெருப்பாக புகைந்து கொண்டு இருப்பதைக் காண முடிந்தது.

DAP-யின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் சேவையைப் பாராட்டி நடைபெற்ற விருந்து நிகழ்வில் அவரின் புதல்வர் லிம் குவான் எங்கிற்கு துரோகம் இழைத்து விட்டதாக அந்த ஆதராவளர் ஸ்டீவன் சிம்மை நோக்கி பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.

அந்த நபரின் குற்றச்சாட்டுக்கு ஸ்டீவன் சிம், புன்னகையை மட்டுமே பதிலாக தந்தாரே தவிர வேறு எதுவும் பேசவில்லை. டிஏபியில் உட்பூசல் இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக், கடந்த வாரம் அறிவித்து இருந்தார்.

ஆனால், இச்சம்பவம் அந்தோணி லோக் முன்னிலையில் நடந்தது. இதனால், அந்த விருந்து நிகழ்வில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. இந்த சலசலப்பு குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!