Oct 14, 2026
Thisaigal NewsYouTube

கெடா மந்திரி பெசார் பகிரங்க மன்னிப்புக் கோரினார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

ஷா ஆலாம், பிப்.26-

தன்னைச் சிறுமைப்படுத்தியதாகக் கூறி, கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சனூசி நோருக்கு எதிராக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தொடுத்த அவதூறு வழக்கு, நல்ல முறையில் தீர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

ஷா ஆலாம் உயர் நீதிமன்றதில், சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரியிடம், கெடா மந்திரி பெசார் சனூசி நோர், பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து மன்னிப்போம், மறப்போம் என்ற அடிப்படையில் இரு மந்திரி பெசார்களுக்கு இடையில் நிலவி வந்த சட்டப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது.

எனினும் சனூசி கேட்டுக் கொண்டுள்ள மன்னிப்பின் உள்ளடக்கத்தை பொதுவில் வெளியிடுவதற்கு நீதிபதி ரோஸி பைனுன் மறுத்து விட்டார்.

சுங்கை கிள்ளான் ஆற்றின் தூய்மைப்பணி தொடர்பில் சிலாங்கூர் மந்திரி பெசாருக்கு அவதூறு ஏற்படுத்தும் தன்மையிலான சொற்களை கெடா மந்திரி பெசார் பயன்படுத்தியதாக அந்த சிவில் வழக்கில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →