Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பாஸ் கட்சி நாட்டிற்குத் தலைமையேற்கத் தயாராக இருக்க வேண்டும்
அரசியல்

பாஸ் கட்சி நாட்டிற்குத் தலைமையேற்கத் தயாராக இருக்க வேண்டும்

Share:

அலோர் ஸ்டார், செப்டம்பர்.12-

பாஸ் கட்சி, பெரிக்காத்தான் நேஷனலுக்குத் தலைமையேற்கும் அதே வேளையில் நாட்டை வழிநடத்தக்கூடிய பிரதானக் கட்சியாகத் திகழத் தயாராக இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் இளைஞர் பிரிவு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

வரும் திங்கட்கிழமை பாஸ் கட்சியின் 71 ஆவது பேராளர் மாநாடு நடைபெறவிருக்கும் வேளையில் இளைஞர் பிரிவு நிறைவேற்றியுள்ள 4 முக்கிய தீர்மானங்களில் நாட்டிற்குத் தலைமையேற்பதும் அடங்கும்.

பாலஸ்தீன விவகாரத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதில் பாஸ் கட்சி உறுதியாக இருக்க வேண்டும் என்று மற்றொரு தீர்மானத்தை இளைஞர் பிரிவு நிறைவேற்றியுள்ளது.

Related News