அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மூடா கட்சி சார்பில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுவதை அக்கட்சியின் துணைத் தலைவர் அமிரா ஐஸ்யா அப்துல் அஜீஸ் உறுதிபடுத்தியுள்ளார். 19 வேட்பாளர்களின் வேட்புமனுப்பாரங்கள் இன்று நடைபெற்ற வேட்புமனுத்தாக்கலின் போது வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மூடா வேட்பாளர்கள் அனைவரும் சிறந்த அடைவு நிலையைப் பதிவு செய்வார்கள் என்று அமிரா ஐஸ்யா நம்பிக்கை தெரிவித்தார். இத்தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் மூடா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் ரா. சிவபிரகாஷ், கோல குபு பாரு தொகுதியில் நான்கு முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். மூடா கட்சியின் மற்றொரு வேட்பாளரான ஆர்.தனுஷா செந்தோசா தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நான்கு முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


