Jul 26, 2026
Thisaigal NewsYouTube
விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்
அரசியல்

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

Share:

பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளரான டாக்டர் மஸ்லீ மாலிக், முன்னாள் அமைச்சரும் அம்னோ இளைஞர் பிரிவு முன்னாள் தலைவருமான கைரி ஜமாலுட்டின், “பழைய அரசியலில் சிக்கியுள்ளார்” என்று விமர்சித்துள்ளார்.

ஜோகூர் பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஆன் ஹஃபிஸ் காசி உடன் நேருக்கு நேர் விவாதிக்க வேண்டுமென்றால், பக்காத்தான் ஹராப்பான் முதலில் மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று கைரி கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புத்திரி வங்சா தொகுதியில் போட்டியிடும் மஸ்லீ, கைரியின் கருத்து தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும், இளம் வாக்காளர்கள் அரசியல் தலைவர்களிடம் எதிர்பார்க்கும் மாற்றங்களை அவர் புரிந்துகொள்ளாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், முற்போக்கான சிந்தனை கொண்டவர் என்று தோன்றிய கைரி, இன்னும் பழைய அரசியல் அணுகுமுறையிலேயே சிக்கியிருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றும் மஸ்லீ தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், அவர் முன்னோக்கிய பார்வையுடன், இளைஞர்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்பவர் என்று தாம் நினைத்ததாகவும் மஸ்லீ விவரித்துள்ளார்.

குறிப்பாக ஜென் ஜி இளைஞர்கள் பலரை அவர் தமது கருத்தால் ஏமாற்றமடையச் செய்துள்ளார் என்று தாம் கருதுவதாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு இளைஞர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் மஸ்லீ தெரிவித்துள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: நாளை நேரில் செல்கிறார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: நாளை நேரில் செல்கிறார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

பிஎன் கூட்டணி இனவாதத்தில் மூழ்கட்டும்; பிஎச் தனது செயல்திட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தும்: தெங்கு ஜாஃப்ருல்

பிஎன் கூட்டணி இனவாதத்தில் மூழ்கட்டும்; பிஎச் தனது செயல்திட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தும்: தெங்கு ஜாஃப்ருல்

தனது கருத்துகள் திரிக்கப்பட்டதாக சனுசி குற்றச்சாட்டு; சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரிக்கை

தனது கருத்துகள் திரிக்கப்பட்டதாக சனுசி குற்றச்சாட்டு; சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரிக்கை

மக்களின் வரவேற்பு, ஆதரவு நேர்மறையாக உள்ளது, டாக்டர் ராஜசேகரன் பெருமிதம்

மக்களின் வரவேற்பு, ஆதரவு நேர்மறையாக உள்ளது, டாக்டர் ராஜசேகரன் பெருமிதம்

மலேசியா அனைத்து குடிமக்களுக்கும் சமமானது: சனுசியின் கருத்துக்கு டாக்டர் வீ கா சியோங் கண்டனம்

மலேசியா அனைத்து குடிமக்களுக்கும் சமமானது: சனுசியின் கருத்துக்கு டாக்டர் வீ கா சியோங் கண்டனம்

ஒருமித்த கருத்து இல்லாமல் பெர்சத்துவை பிஎன் கூட்டணியில் இருந்து நீக்க முடியாது: முகிதின் யாசின்

ஒருமித்த கருத்து இல்லாமல் பெர்சத்துவை பிஎன் கூட்டணியில் இருந்து நீக்க முடியாது: முகிதின் யாசின்