மலாக்கா மாநிலத் தேர்தலில் பெர்சாத்து தனது சொந்தச் சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அஸ்மின் அலி தெரிவித்தார்.
அதேவேளை, தேர்தலை எதிர்கொள்வதற்காக மற்ற தரப்புகளுடன் ஒத்துழைப்பது தொடர்பில் பேச்சு நடத்தவும், அதனை மேலும் செம்மைப்படுத்தவும் பெர்சத்து தயாராக இருப்பதாக அவர் கூறினார். போட்டியிடவுள்ள தொகுதிகள் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
இன்று மாலை பெர்சாத்து தலைவர் டான் ஸ்ரீ முகைதின் யாசின் தலைமையில் நடைபெற்ற அரசியல் பிரிவுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அஸ்மின் அலி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
மலாக்கா மாநில நிர்வாகத்தின் நிலைத்தன்மையையும் தொடர்ச்சியையும் உறுதி செய்வதற்காக, தேர்தல் ஒத்துழைப்பு மூலம் வாய்ப்புகளை அதிகரிப்பதே நோக்கம் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஜூன் மாதம் பாஸ் கட்சி, பெர்சாத்துடனான அரசியல் ஒத்துழைப்பை முறித்துக் கொண்டதைத் தொடர்ந்து, பெர்சத்து பெரிக்காத்தான் நேஷனலில் ஓரங்கட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.








