சிலாங்கூர், ஜூன் 06-
சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரி-க்கு தாம் ஆதரவளித்துள்ளதை, பெர்சாத்து கட்சியின் கடைநிலை உறுப்பினர்கள் மறைமுகமாக ஆதரிப்பதாக, செலாட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ரஷித் அசாரி கூறியுள்ளதை, சிலாங்கூர் பெர்சாத்து கட்சியின் துணை தலைவர் முகமது ரஃபிக் அப்துல்லா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்-முக்கு பெர்சாத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளதைத் தொடர்ந்து, அமிருதீன் ஷாரி-க்கு ஆதரவளித்துள்ள அப்துல் ரஷித், தமது செயலை நியாயப்படுத்துவதற்காகவே, அவ்வாறு கூறியிருப்பதாக, முகமது ரஃபிக் கூறினார்.
அப்துல் ரஷித் கூறுவது உண்மையாக இருந்திருந்தால், செலாட் கிள்ளான், காப்பார் ஆகிய பகுதிகளில் பெர்சாத்து கட்சி முடங்கி போயிருக்கும். அவருடன் பல உறுப்பினர்கள் பிந்தொடர்ந்து சென்றிருப்பார்கள்.
ஆனால், தற்போது வரையில் அங்குள்ள உறுப்பினர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருந்து வருவதாக, முகமது ரஃபிக் குறிப்பிட்டார்.








