கோலாலம்பூர், நவ.8-
மடானி அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம், வரும் நபம்வர் 22 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த மூன்று நாள் கொண்டாட்டம் நடைபெறும் இடம், கோலாலம்பூர் மாநாட்டு மண்டபமான கே.எல்.சி.சி. க்கு மாற்றப்பட்டுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் பாஹ்மி பாட்ஸில் தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அமைச்சரவைக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளரான பாஹ்மி பாட்ஸில் குறிப்பிட்டார்.
இவ்விழா கொண்டாடுவதற்கு முதலில் தேர்வு செய்யப்பட்ட இடமானது, அதன் அமைப்பு முறை மற்றும் இட வசதிகள் முதலியவற்றை கருத்தில் கொண்டு இட மாற்றம் செய்யப்படுவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கினார்.








