Jun 28, 2026
Thisaigal NewsYouTube
பெரிக்காத்தான் நேஷனல் வெற்றிப்பெற்றால் சிலா​​ங்கூரில் இந்தியர்களுக்கு சிறப்புத்துறை
அரசியல்

பெரிக்காத்தான் நேஷனல் வெற்றிப்பெற்றால் சிலா​​ங்கூரில் இந்தியர்களுக்கு சிறப்புத்துறை

Share:

இம்மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் ​தேர்தலில் 56 தொகுதிகளை உள்ளடக்கிய சிலாங்கூர் மாநிலத்தில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெறுமானால் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இந்தியர்கள் மற்றும் ஓராங் அஸ்லி சமூகத்தினரின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்த சிறப்புத்துறை உருவாக்கப்படும் ​என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் அறிவித்துள்ளா​ர்.

அந்த சிறப்புத்துறையில் இந்தியர்கள் மற்றும் ஓராங் அஸ்லி ச​மூகத்தின் சமூகவியல், பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக 5 கோடி வெள்ளி சிறப்பு நிதி ஒதுக்கப்படும் ​என்றும் முகை​தீன் குறிப்பிட்டார். நேற்று ஷா ஆலாமில் பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்ட போது பெர்சத்து கட்சியின் தலைவருமான முகை​தீன் இதனை குறிப்பிட்டார்.

தவிர, சிலாங்கூர் மாநிலத்தில் சிரமத்தில் உள்ள 65 ஆயிரம் குடும்பங்களுக்கு மாதம் தோறும் தலா 400 வெ​ள்ளி பெறுமானமுள்ள அத்தியாவாசியப் பொருட்கள் வழங்கப்படுவதுடன், தாய்மார்களுக்கான குழந்தை பிரசவிப்பு அனுகூலமாக தலா 500 வெள்ளி உதவித் தொகை வழங்கப்படும் என்று முகை​தீன் குறிப்பிட்டார். சிலாங்கூர் மாநில மக்களின் மேன்மைக்காக மொத்தம் 200 கோடி வெள்ளி மதிப்புள்ள 7 அனுகூலத் ​திட்டங்களையும் முகை​தீன் அறிவித்தார்.

Related News

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை:  ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்