Dec 1, 2025
Thisaigal NewsYouTube
சபா மாநிலத்தில் ஒற்றுமை அரசாங்கம் அமைந்தது
அரசியல்

சபா மாநிலத்தில் ஒற்றுமை அரசாங்கம் அமைந்தது

Share:

கோத்தா கினபாலு, டிசம்பர்.01-

சபா மாநிலத்தில் ஒற்றுமை அரசாங்கம் அமைந்துள்ளது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சபா மாநிலத்தின் 17 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு மாநில முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் தலைமையில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

GRS கூட்டணி தலைமையில் UPKO, பக்காத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனல் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவியுள்ளன. ஒற்றுமை அரசாங்கத்தில் மூன்று துணை முதலமைச்சர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

Datuk Seri Dr Joachim Gunsalam, Datuk Seri Masi Manjun மற்றும் Datuk Ewon Benedick ஆகியோர் துணை முதலமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related News