அலோர் ஸ்டார், அக்டோபர்.02-
வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் கெராக்கான் கட்சி, பினாங்கு மாநிலத்தில் தனது சொந்தச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு முன்மொழிந்த திட்டத்தைப் பரிசீலினைச் செய்யத் தயார் என்று பெரிக்காத்தான் நேஷனல் தெரிவித்துள்ளது.
பினாங்கு மாநிலத்தில் உள்ள வாக்காளர்களைக் கவர்வதற்கு அந்த யுக்தி ஆக்கப்பூர்மானப் பலனைத் தருமானால் அது குறித்து பரிசீலனைச் செய்யத் தாங்கள் தயாராக இருப்பதாக பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தேர்தல் தலைமை இயக்குநரும், கெடா மந்திரி பெசாருமான முகமட் சனூசி முகமட் நோர் குறிப்பிட்டார்.