கெடா மாநிலத்தின் 15 ஆவது சட்டமன்ற தேர்தல் மிக முக்கியமானதாகும். இத்தேர்தல் மாநிலத்திலுள்ள இளையோர்களின் சிந்தனையை மாற்றும் தருணமாகும் என்று கூலிம் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளராக போட்டியிடும் தேஹ் லியான் ஓங் கூறுகிறார்.
இம்முறை கூலிம் சட்டமன்றத்திற்குப் போட்டியிடும் மக்கள் நீதி கட்சியின் வேட்பாளரான தேஹ் லியான் ஓங் , பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளரிடம் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். இதற்கு முன்பு, தேஹ் லியான் ஓங் கூலிம் பண்டார் பாரு, மக்கள் நீதி கட்சியின் தொகுதித் தலைவர் பொறுப்பை ஐந்து ஆண்டு காலமாக தற்காத்து வருகிறார். அவர் கூலிம் வட்டார மக்களுக்கு தொடர்ந்து அயராமல் சேவையை வழங்கி வருகிறார்.
கெடா மாநில இளைஞர்கள் அரசியல் வழிமுறைகளை புரிந்துக் கொண்டால் தற்போதைய ஒற்றுமை அரசாங்கம் இளையோர்களுக்காக திறந்துள்ள பல்வேறு திட்டங்களின் வாயிலாக நன்மை பெற முடியும் என்று தேஹ் லியான் ஓங் வலியுறுத்தினார். இந்த சட்டமன்றத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசிவரும் எதிர்க்கட்சியினரின் மாய வலையில் விழுந்து விடாமல் ஒற்றுமை அரசாங்கத்திற்கு இளையோர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பையும், ஆதரவையும் நல்கி வர வேண்டும் என்று தேஹ் லியான் ஓங் கேட்டுக்கொண்டார்.
இன்று காலையில் கூலிம் கரங்கான் வட்டாரத்திலுள்ள மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்த தேஹ் லியான் ஓங் , வரும் சட்டமன்றத் தேர்தலில் கூலிம் தொகுதியில் பக்காத்தான் ஹாராப்பான் வெற்றி பெற்றால் அதிகமான இளைஞர்களுக்கு தேவையான வேலை வாய்ப்புகள், கல்வி மேம்பாட்டுத்திட்டங்கள் என பல திட்டங்கள் காத்திருப்பதாக உறுதி அளித்தார்.

Related News

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

அமெரிக்க அதிபரின் வருகையை எதிர்த்து 700 பேர் ஆட்சேப மறியல்

கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது மலேசியா!

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் வாயைத் திறக்காதது ஏன்?

வழக்கை மீட்டுக் கொண்டார் கெடா மந்திரி பெசார்


