Sep 24, 2026
Thisaigal NewsYouTube
பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு
அரசியல்

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

Share:

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளோ அல்லது 'ஃபத்வாக்களோ' நிலையான கொள்கை அடிப்படையில் அல்லாமல், அவர்களின் அரசியல் சுயநலத்திற்கு ஏற்ப மாறுபடுவதால், ஜோகூர் மாநில வாக்காளர்கள் அவற்றை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று அமானா தலைவர் டத்தோஸ்ரீ முகமட் சாபு வலியுறுத்தியுள்ளார்.

பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், கடந்த காலங்களில் அம்னோ மற்றும் ஜசெக ஆகிய கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைத்த பாஸ் கட்சி, தற்போது ஜோகூர் தேர்தலில் தங்களின் ஆதரவாளர்களை பாரிசான் நேஷனல் கூட்டணிக்கு வாக்கு செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய தற்காலிக உத்தரவுகள் வெறும் தேர்தல் வெற்றிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், மாற்று மதத்தைச் சேர்ந்த தியோ என்பவரை பெர்மாஸ் தொகுதியில் அமானா களம் இறக்கியுள்ளதன் மூலம் தங்களின் கட்சி அனைவருக்குமான உள்ளடக்கிய அரசியலை முன்னெடுப்பதை நிரூபித்துள்ளதாக முகமட் சாபு கூறினார்.

Related News