Jan 21, 2026
Thisaigal NewsYouTube
தொகுதி ஒதுக்கீடு ஐடில்லடாவிற்குப் பிறகு நிறைவடையும்
அரசியல்

தொகுதி ஒதுக்கீடு ஐடில்லடாவிற்குப் பிறகு நிறைவடையும்

Share:

விரைவில் நடைபெற விருக்கும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பரிசான் நேஷனலுக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் ஐடில்லடா பெருநாளுக்குப் பிறகு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இன்னும், ஓரிரு தொகுதிகள் மட்டுமே முடிவு செய்யப்படாத நிலையில், அவை விரைவில் முடிவுக்குக்கொண்டுவரப்படும் என்று சிலாங்கூர் மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அமிருடீன் ஷாரி குறிப்பிட்டார்.

ஏற்கெனவே, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அம்னோ தலைவர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடியுடன் சந்திப்பு நடத்தியிருக்கிறார் என்றும், மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையில் நல்ல அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தாம் நம்புவதாக அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

Related News