நவ. 7-
இந்திய சமூகம், மித்ரா விவகாரங்களுக்கு நாடாளுமன்றத்தில் பதிலடிக்க தமக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற மித்ரா நிர்வாகம், இந்தியர்களை பிரதிநிதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சந்திப்பில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டதாக டத்தோஸ்ரீ ரமணன் விளக்கினார்.
முன்னதாக, பிரதமருடனான இந்தக்கூட்டத்தில் இந்திய சமூகத்தை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கான கருத்துகள், ஆலோனைகள் கலந்துரையாடப்பட்டதாக டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.








