கோலாலம்பூர், நவம்பர்.05-
தமது தலைமையிலான பெர்சத்து கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள உட்பூசல் பிரச்னைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்குமாறு கட்சி உறுப்பினர்களை டான் ஶ்ரீ முகைதீன் யாசின் கேட்டுக் கொண்டார்.
இம்மாதம் இறுதியில் நடைபெறவிருக்கும் சபா தேர்தலில் அனைத்து உறுப்பினர்களும் கவனம் செலுத்த வேண்டுமே தவிர கட்சியின் உட்பூசலை நீட்டித்துக் கொண்டு இருப்பதற்கு இது தருணம் அல்ல என்று அவர் அறிவுறுத்தினார்.
நேற்று நடைபெற்ற கட்சியின் உச்சமன்றக் கூட்டத்திலும் இவ்விவகாரம் வலியுறுத்தப்பட்டு இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
பெர்சத்து கட்சி தற்போது இரண்டு அணிகளாகப் பிளவுப்பட்டு இருப்பது தொடர்பில் முகைதீன் இந்த நினைவுறுத்தலை வழங்கியுள்ளார்.








