May 3, 2026
Thisaigal NewsYouTube
PHச்சுடன் உறவு இல்லை - முகிதீன்
அரசியல்

PHச்சுடன் உறவு இல்லை - முகிதீன்

Share:

கட்சியில் உள்ள ஒரு பிரிவினர் பாகாத்தான் ஹராப்பானுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுடின் கூறியிருப்பது உண்மையில்லை. அக்கூற்று ஆதாரமற்றது என பெர்சத்து கட்சித் தலைவர் டான் ஸ்ரீ முகிதீன் யாசின் தெளிவுபடுத்தியிருகிறார்.

பெரிகாத்தான் நேஷனலுடனான இணக்கமான உறவுகளைச் சீர்குலைக்கும் நோக்கிலான மோசமான கூற்று அது. அதோடு அத்தகைய ஒரு விஷயம் கட்சியின் எந்த மட்டத்திலும் விவாதிக்கப்படவில்லை என முகிதீன் குறிப்பிட்டார்.

பெர்சத்துவின் கொள்கைகள் தெளிவானவை. மதம், இனம் மற்றும் நாட்டைப் பாதுகாப்பது மற்றும் மக்களின் நலனைத் தற்காப்பது. இந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே பிற கட்சிகளுடனான பெர்சத்துவின் ஒத்துழைப்பு இருக்கிறது என அந்த முன்னாள் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

இதற்கு முன் பி.கே.ஆர்-ரில் இருந்து பின்னர் பெர்சத்துவில் இணைந்த ஒரு பிரிவு, PHச்சுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக ஹம்சா நேற்று கூறியிருந்தார். இருப்பினும் அவர் குறிப்பாக யாரையும் பெயரிடவில்லை.

கடந்த மாதம் பெர்சத்துவிலிருந்து நீக்கப்பட்ட ஹம்ஸா, பெர்சத்து பொதுச் செயலாளர் அஸ்மின் அலி, இளைஞர் பிரிவுத் தலைவர் ஹில்மான் இடாம் மற்றும் இணை பிரிவு துணைத் தலைவர் ஆர். ஸ்ரீ சஞ்சீவன் ஆகியோரிடம் இருந்து தம்மைத் தனிமைப்படுத்தி வந்ததாக நம்பப்படுகிறது. அவர்கள் அனைவரும் இதற்கு முன் பி.கே.ஆர்-ரில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு