கோலாலம்பூர், நவ. 21-
தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் கல்வி பேராளர்கள் குழு மலேசியாவிற்கு கல்வி அலுவல் பயணம் மேற்கொண்டது, துணை கல்வி அமைச்சர் வோங் கா வோவிற்கு எவ்வாறு தெரியாமல் போனது என்று மசீச தலைவர் வீ கா சியோங் இன்று கேள்வி எழுப்பினார்.
ஆப்கானிஸ்தான் கல்வி தலைமை இயக்குநர் தலைமையில் அந்நாட்டின் கல்வி பேராளர்கள் குழு கமக்கமான முறையில் மலேசியாவிற்கு வந்துள்ளனர் என்று கூறப்பட்டாலும், அந்த குழுவை வரவேற்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ள கல்வி அமைச்சு, எவ்வாறு துணை கல்வி அமைச்சருக்கு அறிவிக்காமல் போனது என்று டாக்டர் வீ கா சியோங் கேள்வி எழுப்பினார்.
கல்வி அமைச்சர் ஃபாட்ஹ்லினா சீடேக்குடன் அணுக்கமான தொடர்பை கொண்டுள்ள துணை கல்வி அமைச்சர் வோங் கா வோவிற்கு இந்த விவகாரம் தெரியாது என்று கூறப்படுவது தமக்கு வியப்பை அளிக்கிறது என வீ கா சியோங் குறிப்பிட்டுள்ளார்.








