Jan 21, 2026
Thisaigal NewsYouTube
மூன்று மாநிலங்களை தற்காத்துக்கொள்ள முடியும்
அரசியல்

மூன்று மாநிலங்களை தற்காத்துக்கொள்ள முடியும்

Share:

விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் கூட்டணியின் ஒத்துழைப்புடன் சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என பக்கத்தான் ஹராப்பான் நம்புகிறது.

நடப்பு அரசு நிர்வாகம் மீது அதிகமான வாக்காளர்கள் திருப்தி கொண்டுள்ளதை ஹராப்பான் வசமுள்ள சம்பந்தப்பட்ட மூன்று மாநிலங்களில் மாதாந்திர அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு காட்டுகிறது என்று கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி கூறினார்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் தலைமையிலான நெகிரி செம்பிலான் அரசாங்கம் மிக அதிகமாக அதாவது 75 விழுக்காட்டுப் புள்ளிகளை பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வின் போது மக்கள் நடப்பு அரசாங்கத்தை ஆதரிக்கிறீர்களா? அரசு நிர்வாகம் மீது திருப்தி கொள்கிறீர்களா என்ற இரு கேள்விகள் முன்வைக்கப்பட்டன என்று ரபிஸி அவர் தெரிவித்தார்.

Related News