கோலாலம்பூர், டிச.6-
மசீச உதவித் தலைவர் டான் தெக் செங் மற்றும் ஸ்டார் மீடியாவிற்கு எதிராக தாம் தொடுத்த அவதூறு வழக்கின் விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள முடிவை எதிர்த்து டிஏபி தலைவர் லிம் குவான் எங் செய்து கொண்ட மேல்முறையீட்டில் இன்று தோல்விக் கண்டார்.
லிம் குவான் எங்கின் மேல்முறையீட்டை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பகான் நாடாளுமன்ற உறுப்பினரான லிம் குவான் எங்கின் மேல்முறையீட்டில் தகுதிபாடுயில்லை என்று கூறி, அவரின் விண்ணப்பத்தை மூவர் அடங்கிய நீதிபதி குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி சீ மீ சுன் செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்தார்.
இதன் தொடர்பில் வழக்கு செலவுத் தொகையாக மசீச உதவித் தலைவருக்கு 30 ஆயிரம் ரிங்கிட்டும், ஸ்டார் மீடியாவிற்கு 40 ஆயிரம் ரிங்கிட்டாகவும் வழக்கு செலவுத் தொகையாக லிம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.








