Sep 23, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: நாளை நேரில் செல்கிறார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்
அரசியல்

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: நாளை நேரில் செல்கிறார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் குறித்த நிருபர்களின் கேள்விக்கு, தாம் நாளை அங்கு நேரில் செல்லவிருப்பதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சுருக்கமாகப் பதிலளித்துள்ளார். வாக்கெடுப்புக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அங்குள்ள தேர்தல் களம் குறித்துப் பேச அவர் மறுத்துவிட்டார்.

இதற்கிடையே, 'வோடஸ் ரிசர்ச்' நிறுவனத்தின் புதிய கணிப்புப்படி, பக்காத்தான் ஹரப்பான் 42 சதவீத வாக்கு ஆதரவுடனும், பாரிசான் நேஷனல் 35 சதவீத ஆதரவுடனும் முன்னிலையில் உள்ளன. மொத்தமுள்ள 36 தொகுதிகளில், ஆட்சி அமைக்க 19 இடங்கள் தேவை என்ற நிலையில், பக்காத்தான் ஹராப்பான் 17 இடங்களையும், பாரிசான் நேஷனல் 15 இடங்களையும், பெரிக்காத்தான் நேஷனல் 2 இடங்களையும் வெல்லக்கூடும் என அந்த ஆய்வு கணித்துள்ளது.

Related News