Dec 7, 2025
Thisaigal NewsYouTube
7 தற்கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன
அரசியல்

7 தற்கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன

Share:

கடந்த 2014 முதல் 2018 ஆம் ஆண்டு வரை போலீஸ்காரர்கள் மத்தியில் ஏழு தற்கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் இன்று மக்களவையில் தெரிவித்தார்.
தவிர இந்த வருடத்தில் இதுவரையில் போலீஸ் படை தொடர்புடைய மேலும் இரு மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அவை மன உளைச்சலால் ஏற்பட்டதாகக் கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குடும்பத்தினரிடமிருந்து சற்று ஒதுங்கி தனிமையில் இருப்பது, பணியிட சூழல், உடல் நலம் பாதிப்பு போன்றவை அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன என்று ஶ்ரீ காடிங் எம்.பி. அமினோல்ஹுடா ஹாசான் கேள்விக்குப் பதில் அளிக்கையில் அமைச்சர் விளக்கினார்.
போலீஸ்காரர்கள், தங்களின் பணி நேரத்தின் போது துப்பாக்கியைக் கையாளும் பட்சத்தில் அவர்களின் மன நலனை உறுதி செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு சைபுடின் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

Related News