கோலாலம்பூர், டிசம்பர்.01-
பாரிசான் நேஷனலின் உறுப்புக் கட்சியான மஇகா, டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலில் இணைவதற்கு அதிகாரப்பூர்வமாகத் கடிதம் வழங்கியுள்ளது.
மஇகா தேசியத் தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் கையொப்பமிட்ட அந்த அதிகாரப்பூர்வக் கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
பெரிக்காத்தான் நேஷனலில் இணைவதற்கு மஇகா செய்து கொண்டுள்ள விண்ணப்பத்தை டான் ஶ்ரீ முகைதீன் யாசின் உறுதிப்படுத்தியுளார்.
தனது தலைமையிலான கூட்டணியில் மஇகா இணைவதைத் தாங்கள் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்ட போதிலும் இது தொடர்பாக கூட்டணியின் உச்சமன்றக் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று பெர்சத்து கட்சியின் தலைவருமான டான் ஶ்ரீ முகைதீன் யாசின் குறிப்பிட்டார்.








