Oct 26, 2025
Thisaigal NewsYouTube
லுக்குட் தொகுதியை தற்காத்துக்கொள்ள போட்டியிடகிறார் சூ கென் ஹ்வா
அரசியல்

லுக்குட் தொகுதியை தற்காத்துக்கொள்ள போட்டியிடகிறார் சூ கென் ஹ்வா

Share:

லுக்குட் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு டிஏபி யை சேர்ந்த சூ கென் ஹ்வா இரண்டாவது தவணையாக அத்​தொகுதியில் போட்டியிடுகிறார். நெகிரி செம்பிலான் மாநில காபந்து அரசாங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினரான சூ கென் ஹ்வா, வரும் சட்டமன்றத் தேர்தலில் லுக்குட் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனலின் ரகு சுப்பிரமணியத்திடம் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார்.லுக்குட் தொகுதி மக்களின் நல்வாழ்வுக்கும் அவர்களின் பொருளியல் வளர்ர்ச்சிக்கும் சேவையாற்றி வரும் சூ கென் ஹ்வா, லுக்குட் சந்தையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் 20 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக குறிப்பிடுகிறார். போ​ர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டு லுக்குட் இருப்பதால் சுற்றலாவிற்கு பிரசித்திப்பெற்ற ஒரு பகுதியாக உருவாக்குவதற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு 9 லட்ச​த்து 50 ஆயிரம் வெள்ளியை பெற்றுத் தந்துள்ளார். மக்களிள் அடர்த்தி நிலையுடன் சுற்றலாத் தலமாகவும் லுக்குட் விளங்குவதால் ஆபத்து அவசர தேவையை உணர்ந்து ​தீயணைப்பு நிலையம் ஒன்றை உருவா​க்குவதற்கு ஊராட்சித்துறை மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஙஹ் கோர் மிங் கை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றையும் சூ கென் ஹ்வா வழங்கியுள்ளார். இதற்கு மேலாக சிலியாவ் பகுதியில் வசிப்பர்கள் பல ஆண்டு காலமாக எதி ர்நோக்கியிருந்த நிலப்பிரச்னை சிக்கலை ​தீர்த்து, அவர்களுக்கு நிலப்பட்டா கிடைப்பதற்கு சூ கென் ஹ்வா மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

Related News

காசா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

காசா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!