Oct 14, 2026
Thisaigal NewsYouTube

ஆயர் கூனிங் இடைத் தேர்தல், அறுவரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன

திசைகள் செய்திப்பிரிவு
Share:

தைப்பிங், மார்ச்.01-

தாப்பா நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் குறித்து முடிவு எடுப்பதற்கு தற்போது அறுவரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக பேரா மாநில அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் டத்தோஶ்ரீ சராணி முகமட் தெரிவித்துள்ளார்.

அந்த அறுவரின் பெயர்களும், அம்னோ உச்சமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக பேரா மாநில மந்திரி பெசாரான சராணி முகமட் குறிப்பிட்டார்.

நேற்று நடைபெற்ற தாப்பா அம்னோ தொகுதி பொறுப்பாளக்ளுடனான சந்திப்பில் எட்டு பேரின் பெயர்களை அம்னோ உச்சமன்றத்திடம் சமர்ப்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. இந்த எட்டு பேரில் இறுதி நேரத்தில் சிலர் தங்கள் பெயரை மீட்டுக் கொள்ளக்கூடிய சாத்தியம் இருந்ததால், அறுவர் பெயர் அனுப்பப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →