Aug 28, 2026
Thisaigal NewsYouTube
"நான் சீன எதிர்ப்பாளர் அல்ல; ஜசெக கொள்கைகளை மட்டுமே எதிர்க்கிறேன்" - அக்மால் கருத்து
அரசியல்

"நான் சீன எதிர்ப்பாளர் அல்ல; ஜசெக கொள்கைகளை மட்டுமே எதிர்க்கிறேன்" - அக்மால் கருத்து

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.12-

ஜசெக கட்சியுடனான தனது மோதல் இன அடிப்படையில் அல்ல, மாறாக அரசியல் சார்ந்தது என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே தெரிவித்துள்ளார்.

சில தரப்பினர் தன்னை சீன எதிர்பாளராகச் சித்தரிப்பதையும் அக்மால் கண்டித்துள்ளார்.

தனது போராட்டங்கள் ஜசெக கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது மட்டுமே எனக் குறிப்பிட்டுள்ள அவர், தனது உறவினர்களில் சீனர்களும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் பிரச்சினைகளுக்காக தான் குரல் எழுப்பும் போது ஏற்படும் விவாதங்களில், தற்காக்கும் விதமாகவே மட்டுமே பதிலளித்து வருவதாகவும், மோதலை உருவாக்கும் எண்ணம் தனக்கு இருந்ததில்லை என்றும் அக்மால் விவரித்துள்ளார்.

இந்நிலையில், இனவாத அரசியலின் அடிப்படையில், பிரச்சினைகளை உருவாக்குபவர்களின் மீது, தனது அதிருப்தியையும் அக்மால் வெளிப்படுத்தியுள்ளார்.

Related News