Jan 21, 2026
Thisaigal NewsYouTube
சில புதிய முகங்களை டிஏபி அறிமுகப்படுத்தவிருக்கிறது
அரசியல்

சில புதிய முகங்களை டிஏபி அறிமுகப்படுத்தவிருக்கிறது

Share:

வரும் நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் சில புதிய முகங்களை டிஏபி அறிமுகப்படுத்தவிருக்கிறது என்று அதன் தலைவர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார். அதேவேளையில் கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற சில சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் வேட்பாளர்களாக முன்மொழிப்படாது என்பதையும் அந்தோணி லோக் விளக்கினார்.நெகிரி செம்பிலான், டிஏபி செயற்குழு கூட்டத்தில் மாநில தலைவர் என்ற முறையில் தாம் தலைமையேற்ற போது கட்சியின் போராட்டத்திற்கும், மக்கள் வழங்கிய ஆதரவுக்கும் சிறப்பான முறையில் தங்கள் பங்களிப்பை வழங்கிய ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் தமது நன்றியை பதிவு செய்து கொண்டதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார். எந்தவொரு பொதுத் தேர்தலிலும் மாற்றங்கள் இருக்கும். அந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்று தாம் கேட்டுக்கொண்டதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.

Related News