மஇகாவின் முன்னாள் உதவித் தலைவரும், மேலவை உறுப்பினருமான டத்தோ சிவராஜ் சந்திரன், அக்கட்சிலிருந்து விலகியதைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு முக்கியத் தலைவர் மஇகாவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவரான பி. புனிதன், மஇகாவிலிருந்து விலகியுள்ளார். தமது விலகலை மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனிடம் ஒரு கடித வாயிலாக இன்று தெரியப்படுத்தி இருப்பதாக புனிதன் குறிப்பிட்டுள்ளார்.
சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் மற்றும் கோல சிலாங்கூர், பண்டார் பாரு பாதாங் பெர்ஜுந்தாய் கிளையின் இளைஞர் பிரிவுத் தலைவர் ஆகிய பொறுப்புகளிலிருந்து விலகுவதாக புனிதன் அறிவித்துள்ளார்.
கடந்த 15 ஆண்டு காலமாக மஇகாவில் இருந்த தாம் மிகுந்த மனத்தாங்களுடன் அக்கட்சியை விட்டு விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
