கோத்தா கினபாலு, நவம்பர்.18-
17-வது சபா மாநிலத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளும் சாலை பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் பகுதிகளில் பிரச்சாரப் பொருட்களை நிறுவக்கூடாது என்று சபா மாநில பொதுப்பணித் துறையான ஜேகேஆர் வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக வட்டச்சாலைகள், சாலை வளைவுகள், சாலை சந்திப்புகள், பாதசாரிகள் கடக்கும் சாலைகள் மற்றும் போக்குவரத்து விளக்குக் கம்பங்கள் போன்றவற்றில் பிரச்சாரப் பொருட்களை நிறுவத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொடிகள், பதாகைகள் போன்ற பிரச்சாரப் பொருட்களை இந்த இடங்களில் நிறுவுவதால், அவை போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதோடு, விபத்துகள் நடப்பதற்கும் காரணமாக அமைந்துவிடும் என்றும் ஜேகேஆர் அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே அவ்விடங்களில் நிறுவப்பட்டுள்ள கொடிகள் மற்றும் பதாகைகளை உடனடியாக அகற்றவும் ஜேகேஆர் உத்தரவிட்டுள்ளது.








