Aug 26, 2026
Thisaigal NewsYouTube
வேட்பாளரை டிஏபி இன்னும் முடிவு செய்யவில்லை
அரசியல்

வேட்பாளரை டிஏபி இன்னும் முடிவு செய்யவில்லை

Share:

கோல குபு பாரு, ஏப்ரல் 18-

கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்கவிருக்கும் வேட்பாளர் குறித்து டிஏபி இன்னும் முடிவெடுக்கவில்லை என அதன் பொதுச்செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

தற்போதைக்கு, சில வேட்பாளர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதிலிருந்து வேட்பாளரை தீர்மானிப்பது குறித்து பிறகு கலந்துரையாடப்படும் என்றாரவர்.

இதற்கிடையே, சம்பந்தப்பட்ட தொகுதியில் மலாய் வேட்பாளரை டிஏபி நிறுத்தவிருப்பதாக வெளியாகியுள்ள ஆருடம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியை எழுப்பிய நிலையில், வேட்பாளராக முன்னிறுத்த, எவரும் பரிசீலிக்கப்படலாம் என அந்தோனி லோக் கூறினார்.

கோல குபு பாரு தொகுதியில் செல்வாக்குமிக்கவராக இருந்துவரும் ஹுலு சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர் சரிபா பாக்கர்-ரை டிஏபி வேட்பாளராக நிறுத்தவிருப்பதாக, நேற்று தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News