Oct 24, 2025
Thisaigal NewsYouTube
பெரிக்காத்தான் நேஷனல் துணைத்தலைவருக்கே  இந்த நிலைமையா? கெராக்கான் கட்சி வேதனை
அரசியல்

பெரிக்காத்தான் நேஷனல் துணைத்தலைவருக்கே இந்த நிலைமையா? கெராக்கான் கட்சி வேதனை

Share:

பெரிக்காத்தான் நேஷனலின் உறுப்புக் கட்சியான கெராக்கானின் தேசியத் தலைவர் டொமினிக் லாவ், பாஸ் கட்சியின் நிகழ்ச்சியில் விரட்டப்பட்ட சம்பவம் மிகுந்த வருத்தத்தையும் அவமதிப்பையும் ஏற்ப்படுத்துவதாக உள்ளது என்று அக்கட்சியின் தேசிய துணைத்தலைவர் ஓ டோங் கியோங் கவலைத் தெரிவித்துள்ளார்.

பாஸ் கட்சியும், கெராக்கானும் பெரிக்காத்தான் நேஷனலின் முக்கிய உறுப்புக் கட்சிகளாக இருந்த போதிலும் கெராக்கானின் தேசிய தலைவர் டொமினிக் லாவ்- வை பாஸ் கட்சியின் நிகழ்வில் பங்கேற்க கூடாது என்று கூறி, அவர் விரட்டப்பட்ட முறை, அறவே ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஓ டோங் கியோங் குறிப்பிட்டார்.

டொமினிக் லாவ் கெராக்கான் கட்சியின் தேசியத் தலைவர் மட்டும் அல்ல, பினாங்கு மாநில பெரிக்காத்தான் நேஷனலின் தலைவராவார். இதற்கு மேலாக பெரிக்காத்தான் நேஷனலின் தேசிய துணைத்தலைவர் ஆவார். அத்தகைய ஒரு பெரும் தலைவரை பாஸ் கட்சியினர் விரட்ட முற்பட்டது குறித்து அக்கட்சியின் தேசிய தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் விளக்கமளிக்க வேண்டும் என்று ஓ டோங் கியோங் கேட்டுக் கொண்டார்.

Related News