Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கிழக்கை நோக்கும் கொள்கையை மலேசியா தொடரும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கிழக்கை நோக்கும் கொள்கையை மலேசியா தொடரும்

லீமா, நவ.16-


உழைப்பிலும், சுறுசுறுப்பிலும், அறிவாற்றலிலும், தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்கும் ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளின் அணுகுமுறையை மலேசியாவும் கையாள வேண்டும் என்பதற்கு ஓர் உந்தும் சக்தியாக பயன்படுத்தப்பட்ட கிழக்கை நோக்கும் கொள்கையை தொடர்வதற்கு மலேசியா விருப்பம் கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்க நாடான பெரு தலைநகர் லீமாவில் நடைபெற்ற ஆசிய பசிபிப் பொருளாதார உச்சநிலை மாநாடான ஏபெக்கல் ஜப்பானியப் பிரதமர் ஷிகேரு இஷிபா-வுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.

அடுத்த ஆண்டு, ஆசியானுக்கு மலேசியா தலைமையேற்பதற்கு ஜப்பனியப் பிரதமர் தமது முழு ஆதரவை தெரிவித்து இருப்பதையும் டத்தோஸ்ரீ அன்வார் சுட்டிக்காட்டினார்.

அதேவேளையில் கிழக்கை நோக்கும் கொள்கையின் வாயிலாக வர்ததகம், ஆள்பல பரிமாற்றம், தற்காப்பு, பாதுகாப்பு, கடல்சார் துறை, கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் மலேசியாவும், ஜப்பானும் கூட்டு ஒத்துழைப்பு கொள்வது குறித்தும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →