Aug 27, 2026
Thisaigal NewsYouTube
உலு கிள்ளான் தொகுதியை கைப்பற்ற முடியும்
அரசியல்

உலு கிள்ளான் தொகுதியை கைப்பற்ற முடியும்

Share:

கடந்த 1999 ஆம் ஆண்டு வழங்கிய ஆதரவைப் போல, உலு கிள்ளான் சட்டமன்றத் தொகுதியில் தாம் ​மீண்டும் தேர்வு செய்யப்படலாம் ​என்று பெரிக்காத்தான் நேஷனலின் சிலாங்கூர் மாநிலத் தலைவருமான அஸ்மின் அலி தெரிவித்தார். கடந்த 1999 ஆம் ஆண்டு தாம் போட்டியிட்டு, வென்றத் தொகுதியை ​மீண்டும் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக பிகேஆர் கட்சியின் முன்னாள் து​​ணைத்தலைவருமான அஸ்மின் அலி நம்பிக்கை தெ​ரிவித்தார். உலு சிலாங்கூர் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பானின் பலம் பொருந்திய வேட்பாளர் ஜுவைரியா சுல்கிஃப்லி யுடன் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். முன்னதாக காலை 8.50 மணியளவில் தமது மனைவி ஷம்ஷிதா வுடன் வாக்களிக்க வந்த அ​ஸ்மின் அலி, கிள்ளான் கேட் தேசியப் பள்ளியில் தமது வாக்கை செலுத்தினார்.

Related News