Jan 21, 2026
Thisaigal NewsYouTube
தன்னிச்சையாக போட்டியிட்டு ஆச்சரியத்தை கொண்டுவர போகிறதா?
அரசியல்

தன்னிச்சையாக போட்டியிட்டு ஆச்சரியத்தை கொண்டுவர போகிறதா?

Share:

விரைவில் நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தனக்கென ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள மூடாவினால் முடியாதது இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் தலைமையிலான மூடா கட்சி சரியான அரசியல் நகர்வுகளை ஒழுங்கமைத்தால் மட்டுமே, அதனால் ஆச்சரியத்தை ஏற்படுத்த முடியும்.
இருப்பினும், மூடா கட்சியின் இந்த தனி நடவடிக்கையை “தற்கொலை நடவடிக்கை" என்று சன்வே பல்கலைக்கழகத்தில் அரசியல் விரிவுரையாளர், வோங் சின் ஹுஹாட் குறிப்பிட்டுள்ளார்.
மூடா புத்திசாலித்தனமாக செயல்பட்டால், ஒவ்வொரு மாநிலத்திலும் 10 சதவீதத்திற்கு மிகாமல், ஒரு கலவையான இடங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால், வரையறுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போட்டியிடுவது, ஆச்சரியத்தை ஏற்படுத்தாது என்று அவர் தெரிவித்தார்.

Related News