கெஅடிலான் கட்சியின் கோப்பராசி கெஅடிலான் பெர்ஹாட் ஏற்பாட்டில் இரவு விருந்து உபசரிப்பு நிகழ்வு நேற்று கோலாலம்பூரில் நடைபெற்றது. அக்கட்சியின் தேசிய தலவரும் பிரதமருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் அவரின் துணைவியார் டத்தோ ஶ்ரீ வான் அஸிசா இஸ்மாயிலும் கலந்து சிறப்பித்தனர்.
கெஅடிலான் என்ற பிகேஆர் கட்சி ஆட்சி வீடத்தில் அமர்திருந்த போதிலும் செல்வ வளங்களை கைப்பற்றுவதில் ஒருபோதும் தனது அதிகாரத்தை பயன்படுத்தாது.
அந்த அளவிற்கு பிகேஆர் ஒரு பண்பட்ட ஓர் அரசியல் கட்சியாக திகழ்கிறது என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார். இதுபோன்ற வளங்களை கைப்பற்றுவதைக் காட்டிலும் பிகேஆர் கட்சி உருவாக்கியுள்ள கூட்டுறவு கழகத்தின் வாயிலாக எவ்வாறு சுயகாலில் நின்று பொருள் ஈட்டுவது போன்ற அணுகுமுறையைக் கட்சி கொண்டிருக்க வேண்டும் என்று இந்நிகழ்வில் பிரதமர் உரை நிகழ்த்தினார்.
இந்த விருந்து உபசரிப்பில் பிகேஆர் கட்சியின் துணைத்தலைவர் ரஃபிசி ரம்லி, தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் டத்தோ இவோன் பெணடிக், துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.









