Oct 29, 2025
Thisaigal NewsYouTube
பாஸ் கட்சித் தலைவர் ஓய்வு பெற வேண்டும்
அரசியல்

பாஸ் கட்சித் தலைவர் ஓய்வு பெற வேண்டும்

Share:

கோலாலம்பூர், நவ.5-


பாஸ் கட்சித் தலைவர் ஹாஜி அப்துல் ஹாடி அவாங், தனது அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகி, ஓய்வெடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்தத் தலைவர் ஒருவர் பரிந்துரை செய்துள்ளார்.

ஓய்வெடுக்க வேண்டிய நிலையில் இருக்கும் மாராங் எம்.பி.யான ஹாடி அவாங்கிற்கு, அறிவுறுத்த வேண்டிய பெரும்பாலான பாஸ் கட்சி உறுப்பினர்கள், அவருக்கு முகஸ்துதி செய்து வருகின்றனர். இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடப்பதால்தான் அவரை விலகிச் செல்லும்படி துணிந்து கூறுவதற்கு கட்சியில் யாருக்கும் தைரியமில்லை என்று பாஸ் கட்சியின் முன்னாள் உதவித் தலைவரான முகமட நாக்ஹயே அகமட் தெரிவித்தார்.

தம்மைக் கேட்டால், ஹாடி அவாங் அரசியலிருந்து ஓய்வுப்பெற வேண்டும். ஆனால், அவரின் ஆதரவாளர்கள் அவரை ஒரு கடவுன் நிலைக்கு உயர்த்திப்பிடித்து வருகின்றனர் என்று முகமட நாக்ஹயே அகமட் குறிப்பிட்டுள்ளார்.

Related News